தேசியம்
செய்திகள்

கனடிய தேர்தல்களில் இந்தியா, பாகிஸ்தான் தலையீடு?

கனடிய தேர்தல்களில் இந்தியாவும் பாகிஸ்தானும் தலையிட முயன்றதாக கனடாவின் உளவு நிறுவனம் CSIS தெரிவித்தது.

2019, 2021 பொதுத் தேர்தல்களில் இந்தியா, பாகிஸ்தான் அரசாங்கங்கள் தலையிட முயன்றதாக கனடாவின் உளவு நிறுவனம் பகிரங்கப்படுத்திய ஆவணங்களில் தெரிவித்துள்ளது.

2021 ஆம் ஆண்டில், இந்திய அரசாங்கம் கனடிய தேர்தலில் தலையிடும் நோக்கத்தைக் கொண்டிருந்தது எனவும் இதற்காக இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம் எனவும்  CSIS கூறுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர்,கனடாவில் உள்ள பாகிஸ்தான் அரச அதிகாரிகள் கனடிய அரசியலில் இரகசியமாக செல்வாக்கு செலுத்த முயன்றனர் எனவும் CSIS தெரிவித்தது.

கனடாவில் பாகிஸ்தான் அரசாங்கத்தின் நலன்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்த முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டதாக CSIS கூறுகிறது.

இந்த குற்றச் சாட்டுகள் கனடிய தேர்தலில் வெளிநாடுகளின் தலையீடுகள் தொடர்பான விசாரணையின்  ஒரு பகுதியாக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் உள்ளன.

2019, 2021 பொதுத் தேர்தல்களில் சீனா, இந்தியா, ரஷ்யா உட்பட்ட நாடுகளின் தலையீடு குறித்து இந்த பொது விசாரணை ஆராய்கிறது.

Related posts

Old Montreal கட்டிடம் தீப்பிடித்ததில் இருவர் மரணம் – பலர் காயம்

Lankathas Pathmanathan

January இறுதிக்குள் 140 மில்லியன் விரைவு சோதனைகள் கனடாவை வந்தடையும்

Lankathas Pathmanathan

பிரதமர் பதவி விலக Ontario Liberal கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment