இஸ்ரேலுக்கான விமான சேவைகளை Air Canada மீண்டும் ஆரம்பித்துள்ளது.
இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம் காரணமாக ஆறு மாத இடைவெளிக்குப் பின்னர் Air Canada விமான சேவைகள் மீண்டும் ஆரம்பமாகின.
Toronto – Tel Aviv இடையிலான விமான சேவைகள் April 9 ஆம் திகதி மீண்டும் ஆரம்பித்தது.
Montreal – Tel Aviv இடையிலான வாரத்தில் ஒரு முறை விமான சேவை May மாதம் மீண்டும் ஆரம்பிக்கின்றன.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே யுத்தம் ஆரம்பித்ததை தொடர்ந்து, பிற சர்வதேச விமான நிறுவனங்கள் போலவே Air Canada Ben Gurion சர்வதேச விமான நிலையத்திற்கான சேவையை October 8 ஆம் திகதி நிறுத்தியது.
விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் வகையில், விரிவான பாதுகாப்பு பகுப்பாய்வு மேற்கொண்டுள்ளதாக விமான நிறுவனம் கூறியது.
அரசாங்க அதிகாரிகள், விமானக் குழுவினரை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள்,பாதுகாப்பு நிபுணர்களுடன் ஆலோசனைகள் உட்பட விரிவான பாதுகாப்பு பகுப்பாய்வை Air Canada மேற்கொண்டது.
பாதுகாப்புச் சூழ்நிலை காரணமாக இஸ்ரேலுக்கு அத்தியாவசியமற்ற பயணத்தை தவிர்க்குமாறு கனடியர்களுக்கு மத்திய அரசாங்கம் அறிவுறுத்துகிறது.