தேசியம்
செய்திகள்

சில மணிநேரத்தில் இரண்டு Toronto காவல்துறை அதிகாரிகள் காயம்

இரண்டு Toronto காவல்துறை அதிகாரிகள் திங்கட்கிழமை (08) வெவ்வேறு சம்பவங்களில் காயமடைந்தனர்.

Toronto காவல்துறை அதிகாரி ஒருவர் திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் North York நகரில் காயமடைந்தார்.

ஐந்து ஆண்கள் வாகனம் ஒன்றை திருட முயற்சிப்பதாக கிடைத்த புகாரைத் தொடர்ந்து காவல்துறை அதிகாரி அந்தப் பகுதிக்குச் சென்றார்.

சந்தேக நபர்களை கைது செய்ய முயன்ற போது காவல்துறை அதிகாரி காயமடைந்தார்.

இதில் காயமடைந்த காவல்துறை அதிகாரி நலமடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் காவல்துறை அதிகாரியின்  காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் இரண்டு ஆண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் மூன்று சந்தேக நபர்கள் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்ற பின்னர் தேடப்பட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் நிகழ்ந்த ஏறக்குறைய ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் மற்றொரு Toronto காவல்துறை அதிகாரி காயமடைந்த சம்பவம் நிகழ்ந்தது.

சீருடை அணிந்த காவல்துறை அதிகாரியை நபர் ஒருவர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காவல்துறை அதிகாரி உயிருக்கு ஆபத்தற்ற காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

இந்த சம்பவத்தில் ஒரு சந்தேக நபர் கைதானார்.
அந்த நபர் ஏன் காவல்துறை அதிகாரியை தாக்கினார் என்பது தெரியவில்லை.

Related posts

Ontario மாகாணம் இந்த வாரம் மாகாண எல்லைகளை மீண்டும் திறக்கவுள்ளது!

Gaya Raja

இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் குறித்து கனடா கவலை

Lankathas Pathmanathan

பொது சுகாதார நிறுவன தலைமையில் மாற்றம்!

Gaya Raja

Leave a Comment