தேசியம்
செய்திகள்

தற்காலிக குடியேற்றவாசிகள் தொடர்பில் வாக்கெடுப்பு நடத்த தயாராகும் Quebec?

Quebec மாகாணத்தில் தற்காலிக குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையைக் குறைக்க மத்திய அரசுக்கு முதல்வர் François Legault அழுத்தம் கொடுத்துள்ளார்.

மாகாணத்தின் குடியேற்றக் கோரிக்கைகளை பிரதமர் Justin Trudeau ஏற்றுக் கொள்ளாவிட்டால் இந்த விடயத்தில் வாக்கெடுப்பு நடத்த தயாராகவுள்ளதாக Quebec முதல்வர் கூறினார்.

இந்த விடயத்தில் வாக்கெடுப்பு நடத்துவது தனது அரசாங்கத்தின் குறுகிய கால திட்டங்களில் இல்லை எனவும் François Legault கூறினார்.

இதன் முடிவு இந்த விடயத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் உள்ளது என அவர் கூறினார்.

கடந்த மாதம் இந்த விடயம் குறித்து பிரதமர் Justin Trudeau, Quebec முதல்வர் François Legault ஆகியோர் இடையே சந்திப்பொன்று நடைபெற்றது.

இந்த சந்திப்பின் போது, மாகாணத்திற்கு யார் குடியேறலாம் என்பதில் Quebec அரசாங்கத்திற்கு முழு அதிகாரம் இருக்க வேண்டும் என்ற முதல்வரின் கோரிக்கையை பிரதமர் நிராகரித்தார்.

ஆனால் குடியேற்றம் தொடர்பான ஏனைய விடயங்களில் பிரதமர் கணிசமான அளவு வெளிப்படைத்தன்மையை காட்டினார் என François Legault கூறினார்.

இந்த விடயம் குறித்து விவாதிக்க இரண்டு தலைவர்கள் June 30க்குள் சந்திக்க முடிவு செய்தனர்.

Quebec மாகாணத்தில் 560,000 தற்காலிக குடியேற்றவாசிகள் இருப்பதாக முதல்வர் கூறினார்.

இதில் புகலிடக் கோரிக்கையாளர்கள், தற்காலிக வெளிநாட்டு பணியாளர்கள், சர்வதேச மாணவர்களும் அடங்குகின்றனர்.

இவர்கள் சமூக சேவைகளில் சிரமங்களை ஏற்படுத்துவதாகவும் முதல்வர் கூறினார்.

இந்த விடயத்தில் பெரும்பாலான Quebec வாசிகள் தனது நிலைப்பாட்டுடன் உடன் படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு கனடாவுக்கு வந்த 144,000 அகதிகளில் 65,000 க்கும் அதிகமானவர்களை Quebec மாகாணம் வரவேற்றுள்ளது.

குடியேற்றம் தொடர்பான விவாதம் மத்திய மாகாண அரசாங்கங்களுக்கிடையே நீண்ட காலமாக தொடர்ந்து வருகிறது.

Related posts

சீன அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டதாக கூறப்படும் காவல் நிலையங்கள் குறித்து  விசாரித்து வருகிறோம்: RCMP

Lankathas Pathmanathan

New Brunswick அவசர சிகிச்சை பிரிவில் காத்திருந்த நோயாளி மரணம்

Lankathas Pathmanathan

109வது Grey Cup ஆட்டத்தில் Argo அணி வெற்றி

Lankathas Pathmanathan

Leave a Comment