ஹைட்டியில் இருந்து வெளியேறுவதற்கு மேலதிக விமான சேவைகளை கனடிய அரசாங்கம் ஏற்பாடு செய்கிறது.
கரீபியன் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு கனடியர்களின் கோரிக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்த முடிவை கனடிய அரசாங்கம் எடுத்துள்ளது.
அடுத்த வாரம் மேலதிக விமான சேவைகள் வழங்கப்படும் என கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly ஞாயிற்றுக்கிழமை (07) கூறினார்.
ஹைட்டியில் இருந்து வெளியேறுவதற்கு கனடிய அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்றாவது விமானம் ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டது.
இதற்கு முன்னதாக ஒரு விமானம் புதன்கிழமை, மற்றொரு விமானம் வெள்ளிக்கிழமை புறப்பட்டது.
இந்த நிலையில் மேலதிக விமான சேவைகளை கனடிய அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
250 க்கும் மேற்பட்ட கனடிய குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள், அவர்களது நெருங்கிய உறவினர்கள் ஹைட்டியை விட்டு வெளியேற உதவியதாக கனடிய வெளிவிவகார அமைச்சு இந்த வார ஆரம்பத்தில் தெரிவித்தது.
குழு வன்முறைக்கு மத்தியில் ஹைட்டி உணவு, மருந்து பற்றாக்குறைகளை எதிர்கொள்கிறது.
ஹைட்டியில் நிலைமை மிகவும் கடினமாக உள்ளது என ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் Justin Trudeau கூறினார்.