December 12, 2024
தேசியம்
செய்திகள்

Ontarioவில் உறுதிப்படுத்தப்பட்ட மற்றொரு தட்டம்மை தொற்றாளர்!

Ontario மாகாணத்தில் மற்றொரு உறுதிப்படுத்தப்பட்ட தட்டம்மை தொற்றாளர் கண்டறியப்பட்டுள்ளார்.

இவர் அண்மையில் Toronto Pearson சர்வதேச விமான நிலையம் வழியாக வெளிநாடு சென்றவர் என தெரியவருகிறது.

Durham  பிராந்திய சுகாதாரத் துறை புதன்கிழமை இதனை உறுதிப்படுத்தியது.

இவர் அவரது இல்லத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

March 8 ஆம் திகதி மாலை 5:24 முதல்  8:45க்கு இடையில் Toronto Pearson சர்வதேச விமான நிலையத்தின் மூன்றாவது முனையம் ஊடாக பயணித்தவர்கள் இதன் மூலம் நோய் வாய்ப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

March 28 ஆம் திகதி ஜோர்டானில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 10:43 மணிக்கு புறப்பட்டு மாலை 5:34 மணிக்கு Torontoவில் தரையிறங்கிய Royal Jordanian Airlines விமானம் RJ271 இல் பயணித்தவர்களும் நோய் வாய்ப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

Ontarioவின் பொது சுகாதார மையத் தரவுகள் March 27 வரை மாகாணத்தில் ஒன்பது ஆய்வகத்தால் உறுதிப்படுத்தப்பட்ட தட்டம்மை தொற்றுகளை உறுதிப்படுத்தியுள்ளன.

இதில் தற்போது Durham பிராந்தியத்தில் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றாளர் உள்ளடக்கப்படவில்லை.

இவர்களில் ஒருவரைத் தவிர ஏனைய அனைவரும் பயணத்துடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

2023 ஆம் ஆண்டில், Ontarioவில் ஏழு தட்டம்மை தொற்றுக்கள் பதிவாகின.

Related posts

அவசர கால நிலையை அறிவித்த Winnipeg காவல்துறை

Lankathas Pathmanathan

தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் விஜய் தணிகாசலம்

Lankathas Pathmanathan

தமிழர்களின் திரையரங்கில் ஒரு வாரத்தில் மூன்று முறை துப்பாக்கி சுடு

Lankathas Pathmanathan

Leave a Comment