தேசியம்
செய்திகள்

பெண் ஒருவரை தாக்கிய சந்தேகத்தில் தமிழர் கைது!

Don Mills தொடரூந்து நிலையம் அருகே பெண் ஒருவரை தாக்கிய சந்தேக நபரான தமிழர் Toronto காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

சனிக்கிழமை (30) Don Mills தொடரூந்து நிலையம் அருகே ஒரு பெண்ணை உதைத்து தலையில் பலமுறை தாக்கிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக Toronto காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Don Mills Road and Sheppard Avenue East சந்திப்புக்கு அருகாமையில் அமைந்துள்ள Don Mills தொடரூந்து நிலையம் சனியன்று மதியம் 12:30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

Don Mills தொடரூந்து நிலையத்திலிருந்து ஒரு பெண் தனது குழந்தைகளுடன் நடந்து சென்று கொண்டிருந்த போது, சந்தேக நபர் குழந்தைகளை நோக்கி தெரிவித்த கருத்து, அந்தப் பெண்ணை பதிலளிக்கத் தூண்டியது என காவல்துறையினர் தெரிவித்தனர்.

சந்தேக நபர் அந்தப் பெண்ணை பலமுறை உதைத்து ஒரு அடையாளம் தெரியாத பொருளால் தலையில் பலமுறை அடித்ததாகவும் தெரியவருகிறது.

சந்தேக நபர் தப்பிச் செல்வதற்கு முன்னர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் காவல்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதில் காயமடைந்த பெண் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்த சம்பவத்தில் கைதான சந்தேக நபர், Torontoவைச் சேர்ந்த 43 வயதான சுரேஷ் நித்தியானந்தன் என காவல்துறையினரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக நான்கு  குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

முற்றுகை போராட்ட எதிர்ப்பாளர்கள் குறித்த சில கருத்துக்களுக்கு வருத்தம் தெரிவிக்கும் பிரதமர்

Lankathas Pathmanathan

ஒலிம்பிக் மகளிர் ஹாக்கியில் தங்கம் வென்றது கனடா

Lankathas Pathmanathan

கடுமையான வெப்ப நிலை கொண்ட கோடை காலம்

Leave a Comment