புதிய தற்காலிக குடியிருப்பாளர்கள் எண்ணிக்கையை குறைக்க கனடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
முதன்முறையாக, புதிய தற்காலிக குடியிருப்பாளர்கள் எண்ணிக்கைக்கான இலக்குகளை கனடிய அரசாங்கம் நிர்ணயிக்கவுள்ளது.
குடிவரவு அமைச்சர் Marc Miller வியாழக்கிழமை (21) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் தற்காலிக குடியிருப்பாளர்கள் எண்ணிக்கையை தற்போதைய 6.2 சதவீதத்தில் இருந்து ஐந்து சதவீதமாக குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஆண்டுதோறும் புதிய தற்காலிக குடியிருப்பாளர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பை கனடா பதிவு செய்து வருவதாக அமைச்சர் Marc Miller கூறினார்.