இலங்கையின் வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலய விவகாரத்தில் கனடிய அரசாங்கத்தின் தலையீடு கோரப்பட்டுள்ளது.
கனடிய தமிழர் பேரவை இந்த விடயம் குறித்து கனடிய அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
கனடிய வெளிவிவகார அமைச்சர் Mélanie Jolyக்கு இந்த கடிதம் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.