February 23, 2025
தேசியம்
செய்திகள்

அமெரிக்காவை விட மோசமான கனடாவின் காற்றின் தரம்?

கனடாவின் காற்றின் தரம் அமெரிக்காவை விட மோசமாக உள்ளது.

காட்டுத்தீ இதற்கு பிரதான காரணமாக உள்ளதாக  ஒரு புதிய அறிக்கை தெரிவிக்கிறது.

ஆறாவது ஆண்டு உலக காற்று தர அறிக்கை செவ்வாய்க்கிழமை (19) வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கையின் வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்காவை விட கனடாவில் காற்றின் தரம் மோசமாக இருப்பதாக கண்டறிந்துள்ளது.

கனடாவிலும் அமெரிக்காவிலும் உள்ள 15 மாசுபட்ட நகரங்களில் 14 நகரங்கள் கனடாவில் உள்ளன.

இவற்றில் Alberta மாகாணத்தின்  Fort McMurray, Peace River ஆகியன முன்னணியில் உள்ளன.

2023 ஆம் ஆண்டில், May முதல் October வரை பரவிய கனடிய காட்டுத்தீயால் வட அமெரிக்காவில் காற்றின் தரம் கணிசமாக பாதிக்கப்பட்டது.

Related posts

தடுப்பூசி கடவுச்சீட்டு முறையை செயல்படுத்துவது குறித்து Ontario ஆலோசிக்கிறது!

Gaya Raja

Liberal-NDP கூட்டணி மாகாணங்களுடன் மோதலை தூண்டும்: Quebec முதல்வர்

Lankathas Pathmanathan

கனடாவின் அரச தலைவர் மறைவு – கனேடிய அரசியல் பிரமுகர்கள் இரங்கல்

Lankathas Pathmanathan

Leave a Comment