தேசியம்
செய்திகள்

வருடாந்த பணவீக்க விகிதம் குறைந்தது!

கனடாவின் பணவீக்க விகிதம் கடந்த மாதம் எதிர்பாராத வகையில் குறைந்துள்ளது

வருடாந்த பணவீக்க விகிதம் February மாதம் 2.8 சதவீதமாக குறைந்தது.

வருடாந்த பணவீக்க வீழ்ச்சியை கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் செவ்வாய்க்கிழமை (19) அறிவித்தது.

January மாதம் பணவீக்க விகிதம் 2.9 சதவீதமாக இருந்தது.

மளிகை பொருட்களின் விலை குறைவு பணவீக்க விகிதம் குறைவதற்கு மிகப்பெரிய காரணம் என கூறப்படுகிறது.

January மாதம் 3.4 சதவீதமாக இருந்த மளிகை பொருட்களின் பணவீக்க அதிகரிப்பு; February மாதம் 2.4 சதவீதமாக குறைந்தது

October 2021க்குப் பின்னர், மளிகைப் பொருட்களின் பணவீக்கம் ஒட்டு மொத்த பணவீக்க விகிதத்திற்கு குறைவாக இருந்துள்ளது என புள்ளிவிவரத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பொருளாதார வல்லுநர்கள் கனடாவின் பணவீக்க விகிதம் January மாதத்தின் 2.9 சதவீதத்திற்கு மேல் உயரும் என பரவலாக எதிர்பார்த்தனர்.

அதேவேளை கனடிய மத்திய வங்கி அதன் வட்டி விகிதத்தை குறைக்கத் தொடங்கும் என பொருளாதார வல்லுநர்கள் பரவலாக எதிர்பார்க்கின்றனர்.

Related posts

தமிழ் இனப்படுகொலை கல்வி வார சட்டமூல வழக்கை கனடிய உச்சநீதிமன்றம் த‌ள்ளுபடி செய்தது!

Lankathas Pathmanathan

Quebecகில் தேடப்படும் குற்றவாளி கைது

Lankathas Pathmanathan

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது சிறுபான்மை Liberal அரசாங்கம்

Lankathas Pathmanathan

Leave a Comment