தேசியம்
செய்திகள்

Brian Mulroneyயின் அரசமுறை இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை ஆரம்பம்

தங்கள் தந்தையின் மரணத்திற்குப் பின்னர் கிடைத்த ஆதரவுக்காக கனடியர்கள், அரசியல் தலைவர்களுக்கு முன்னாள் பிரதமர் Brian Mulroneyயின் புதல்வர்கள் நன்றி தெரிவித்தனர்.

முன்னாள் பிரதமர் Brian Mulroneyனிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் திங்கட்கிழமை (18) அஞ்சலி செலுத்தினர்.

பிரதமர் Justin Trudeau, Conservative தலைவர்  Pierre Poilievre, NDP தலைவர்  Jagmeet Singh, பசுமைக் கட்சித் தலைவர் Elizabeth May, Bloc Québécois நாடாளுமன்ற உறுப்பினர் Louis Plamondon அனைவரும் முன்னாள் பிரதமருக்கு  திங்களன்று உரைகள் மூலம் கௌரவித்தனர்.

Brian Mulroneyயின் துணைவி, நான்கு பிள்ளைகள் நாடாளுமன்ற பார்வையாளர் பகுதியில் இருந்து இந்த அஞ்சலி நிகழ்வை பார்வையிட்டனர்.

இதன் பின்னர் Ben, Mark, Nicolas Mulroney ஆகியோர் நாடாளுமன்றத்தில் தங்கள் தந்தைக்கு அஞ்சலி செலுத்தியதற்கு நன்றி தெரிவித்தனர்.

Brian Mulroneyயின் அரச முறையிலான இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை (19) Ottawaவில் ஆரம்பிக்கிறது.

சனிக்கிழமையன்று (23) Montrealலில் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது.

Related posts

December மாதம் பதிவான வர்த்தகப் பற்றாக்குறை

Lankathas Pathmanathan

LCBO வேலை நிறுத்தம் தற்காலிகமாக தொடரும்?

Lankathas Pathmanathan

உயர்நிலைப் பாடசாலையில் இளைஞர் கத்தியால் குத்தப்பட்டார் – நால்வர் கைது!

Lankathas Pathmanathan

Leave a Comment