தேசியம்
செய்திகள்

Justin Trudeau: அடுத்த பொது தேர்தலை எதிர்கொள்ள தயார்!

கனடிய பிரதமராக தொடர்ந்து செயற்படவுள்ளதாக Justin Trudeau தெரிவித்தார்.

அரசாங்கத்தின் தலைவராக நீடிக்கும் முடிவில் உறுதியாக உள்ளதாக அவர் கூறினார்.

அடுத்த ஆண்டு நடைபெற திட்டமிடப்பட்டுள்ள பொதுத் தேர்தலை Liberal கட்சியின் தலைவராக சந்திக்க தயாராக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (15) வழங்கிய வானொலி செவ்வி ஒன்றில் அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

பிரதமர் பதவியுடன் வரும் தனிப்பட்ட ரீதியிலான சவால்களை அவர் இந்த செவ்வியில் விவரித்தார்.

ஆனாலும் குறிப்பிடத்தக்க உள்நாட்டு, சர்வதேச சவால்கள் பதவியில் தொடர்ந்து நீடிக்க தூண்டுவதாக அவர்  கூறினார்.

பெண்களின் உரிமைகள், LGBTQ உரிமைகள், காலநிலை மாற்றம் ஆகியவை கனடாவின் தற்போதைய சவால்கள் என பிரதமர் தெரிவித்தார்.

ஜனநாயகத்தின் மீதான உலகளாவிய ரீதியான தாக்குதல்களையும் Justin Trudeau சுட்டிக்காட்டினார்.

Related posts

கனடாவை பொருளாதார ரீதியில் பாதிக்கும் வரி கட்டணங்கள் செவ்வாய் நடைமுறைக்கு வரும்?

Lankathas Pathmanathan

முதலாவது ஈழ தமிழர் கனடாவில் அமைச்சராக பதவியேற்றார்

Lankathas Pathmanathan

கனடிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக சனிக்கிழமை போராட்டம்

Lankathas Pathmanathan

Leave a Comment