February 22, 2025
தேசியம்
செய்திகள்

ஹைட்டியின் இன்றைய நிலைமை குறித்து கனடிய பிரதமர் கவலை!

ஹைட்டியின் இன்றைய நிலைமை குறித்து கனடிய பிரதமர் Justin Trudeau கவலை தெரிவித்துள்ளார்.

ஹைட்டியில் நிலவும் மனிதாபிமான, பாதுகாப்பு, அரசியல் நெருக்கடிகள் குறித்து கனடிய பிரதமர், ஹைட்டி பிரதமருடன் பேசியுள்ளார்.

இந்த நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கான கனடாவின் ஆதரவை Justin Trudeau வெளிப்படுத்தியுள்ளார்.

ஹைட்டி பிரதமர் Ariel Henry விரைவில் பதவி விலகவுள்ளார்.

ஒரு இடைக்கால ஜனாதிபதி குழு உருவாக்கப்பட்டவுடன் தான் பதவி விலகவுள்ளதாக  செவ்வாய்க்கிழமை (12) அதிகாலை Ariel Henry அறிவித்தார்.

வெளிநாட்டுப் பயணத்தின் பின்னர் தனது சொந்த நாட்டிற்கு மீண்டும் செல்லமுடியாத நிலையை Ariel Henry எதிர்கொள்கின்றார்.

அதிகரித்து வரும் அமைதியின்மை, வன்முறை காரணமாக ஹைட்டியின் விமான நிலையம், துறைமுகம் ஆகிய மூடப்பட்டுள்ளன.

ஹெய்ட்டியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து திங்கட்கிழமை அவசர கூட்டம் ஒன்று நடைபெற்றது.

கரீபியன் தலைவர்கள் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளின் அதிகாரிகளை ஜமேகாவில் சந்தித்து ஹெய்ட்டி குறித்து இந்த கூட்டத்தில் விவாதித்தனர்.

ஹெய்ட்டியில் உள்ள தூதரகத்தை கனடா இதுவரை மூடவில்லை என கனடாவின் ஐ.நா தூதர் Bob Rae திங்கட்கிழமை (11) தெரிவித்தார்.

Related posts

கனடியர்களின் சவால்களை எதிர்கொள்ள பொது அறிவு கொள்கைகளை வலியுறுத்தும் எதிர்கட்சி தலைவர்

Lankathas Pathmanathan

October மாதத்தில் வேலை வெற்றிடங்கள் 4.8 சதவீதம்

Lankathas Pathmanathan

சந்திரனைச் சுற்றவுள்ள முதல் கனடியர் Jeremy Hansen

Lankathas Pathmanathan

Leave a Comment