February 23, 2025
தேசியம்
செய்திகள்

ஹெய்ட்டியில் உள்ள கனடிய தூதரகம் மூடப்படவில்லை!

ஹெய்ட்டியில் உள்ள தூதரகத்தை கனடா மூடவில்லை என கனடாவின் ஐ.நா தூதர் Bob Rae தெரிவித்தார்.

ஆனாலும் விமான நிலையம், துறைமுகம் ஆகிய மூடப்பட்டுள்ளதாக Bob Rae கூறினார்.

இதனால் உதவி முயற்சிகள் முடங்கியுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

கரீபியன் தலைவர்கள் அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளின் அதிகாரிகளை ஜமேகாவில் சந்தித்து ஹெய்ட்டி குறித்து விவாதிக்கும் நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.

ஹெய்ட்டியில் உள்ள கனடிய தூதரகம் எவ்வளவு காலம் தொடர்ந்து திறந்திருக்கும் என்பதை பாதுகாப்பு நிலைமை தீர்மானிக்கும் என Bob Rae கூறினார்.

ஹெய்ட்டியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து திங்கட்கிழமை (11) நடைபெறும் அவசர கூட்டத்தில் கனடாவின் ஐ.நா. தூதர் Bob Rae கலந்து கொள்கிறார்.

ஹெய்ட்டியில் ஆயுத கும்பல்களால் நடத்தப்படும் அத்துமீறல்களை கனடா வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்த வன்முறைகளை கண்டிப்பதாக கனடிய வெளியுறவு அமைச்சர் Mélanie Joly வெள்ளிக்கிழமை (08) அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

Related posts

Ontarioவில் தொற்றின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,135ஆக அதிகரிப்பு

Lankathas Pathmanathan

உக்ரேனியர்கள் பயணித்த மற்றும் ஒரு விமானம் கனடாவை வந்தடைந்தது

Lankathas Pathmanathan

Toronto நகர முதல்வருக்கு COVID உறுதி

Lankathas Pathmanathan

Leave a Comment