February 22, 2025
தேசியம்
செய்திகள்

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு நிலையான அமைதி காணும் பயணத்தை ஆரம்பித்துள்ள கனடிய வெளியுறவு அமைச்சர்

கனடிய வெளியுறவு அமைச்சர் Mélanie Joly இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு நிலையான அமைதி காணும் வகையில் பயணம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

புதன்கிழமை (06) ஆரம்பமான இந்த பயணம் 13ஆம் திகதி வரை தொடர்வுள்ளது.

அமைச்சர் Mélanie Joly, சவுதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு அமீரகம், இஸ்ரேல், மேற்குக் கரை ஆகிய பகுதிகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.

March 6 முதல்  9 வரை அவர் சவுதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) ஆகிய நாடுகளுக்கு அவர் பயணம் செய்ய உள்ளதாக வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.

பின்னர் அவர் March 10 முதல் 13 வரை இஸ்ரேல், ஜெருசலேம், மேற்குக் கரைக்கும் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

தனது பயணத்தின் போது, அமைச்சர்  Mélanie Joly இந்த பிராந்தியங்களின் வெளியுறவு அமைச்சர், வெளிநாட்டு அதிகாரிகளை சந்திப்பார்.

தற்போது நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் குறித்த கருத்துக்களை அவர் இந்த சந்திப்புகளில் பரிமாறிக் கொள்வார்.

கடந்த வருடம் October 7ஆம் திகதி ஆரம்பமான இஸ்ரேலுக்கு எதிரான ஹமாஸின் பயங்கரவாத தாக்குதல்களுக்கு கனடாவின் தெளிவான கண்டனத்தை அவர் மீண்டும் வலியுறுத்துவார் என கூறப்படுகிறது.

Related posts

January மாதம் உயர்ந்தது வருடாந்த பணவீக்கம்

Lankathas Pathmanathan

Ontario சட்டமன்றத்தில் தமிழர்கள் மீதான இனப்படுகொலை சட்ட மூலம்: இலங்கை அரசாங்கம் எதிர்ப்பு

Gaya Raja

Toronto பல்கலைக்கழக ஆராய்ச்சியாளருக்கு Nobel பரிசு

Lankathas Pathmanathan

Leave a Comment