தேசியம்
செய்திகள்

Mississauga நகர முதல்வர் இடைத்தேர்தல் அதிகாரப்பூர்வமாக ஆரம்பம்!

Mississauga நகர முதல்வருக்கான இடைத்தேர்தல் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமானது.

புதன்கிழமை Mississauga நகர முதல்வருக்கான போட்டி அதிகாரப்பூர்வமாக ஆரம்பமானது.

இந்த தேர்தலில் போட்டியிட ஆர்வமுள்ள வேட்பாளர்கள் புதன்கிழமை (06) முதல் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

முன்னாள் Mississauga நகர முதல்வர் Hazel McCallionனின் புதல்வன், மூன்று நகரசபை உறுப்பினர்கள் உட்பட மொத்தம் 5 வேட்பாளர்கள் புதன்கிழமை தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

முன்னாள் Mississauga நகர முதல்வர் Hazel McCallionனின் புதல்வன்Peter McCallion, Mississauga முதலாவது தொகுதி நகரசபை உறுப்பினர் Stephen Dasko, இரண்டாவது தொகுதி நகரசபை உறுப்பினர் Alvin Tedjo, ஐந்தாவது தொகுதி நகரசபை உறுப்பினர் Carolyn Parrish ஆகியோர் வேட்பு மனு தாக்கலுக்கு முதலாவது நாளான புதனன்று தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

ஏழாவது தொகுதி நகரசபை உறுப்பினர் Dipika Damerla வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேட்புமனு தாக்கல் April 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Mississauga நகர முதல்வர் தேர்தல் June 10ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Mississauga நகர முதல்வர் பதவியில் இருந்து Bonnie Crombie இந்த வருடத்தின் ஆரம்பத்தில் விலகியிருந்தார்.

Ontario Liberal கட்சியின் தலைமைப் பதவியை வெற்றி பெற்ற Bonnie Crombie, Mississauga நகர முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.

சுமார் 10 ஆண்டுகள் Mississauga நகர முதல்வராக Bonnie Crombie பதவி வகித்தவராவார்.

Related posts

Czech Republic அணியிடம் தோல்வியடைந்த கனடா

Lankathas Pathmanathan

கனடாவில் ஏழு தொகுதிகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்கள் தேர்தல்!

Lankathas Pathmanathan

கனடாவுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்கர்களுக்கு அறிவுறுத்தல்

Lankathas Pathmanathan

Leave a Comment