December 12, 2024
தேசியம்
செய்திகள்

British Colombiaவில் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர்

தட்டம்மை – measles – நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் British Colombia மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டார்.

முதலாவது தட்டம்மை நோயாளர் வார இறுதியில் அடையாளம் காணப்பட்டார் என British Colombia மாகாண சுகாதார அமைச்சகம் தெரிவித்தது.

மாகாண சுகாதார அமைச்சு திங்கட்கிழமை காலை அறிக்கை ஒன்றில் இதை உறுதிப்படுத்தியுள்ளது.

2019 ஆம் ஆண்டுக்கு பின்னர் பதிவு செய்யப்பட்ட முதலாவது தட்டம்மை நோயாளர் இவராவார்.

இந்த நிலையில் இலைதுளிர் கால பயணங்களுக்கு முன்னர், உள்ளூர்வாசிகள் தங்களின் நோய்த் தடுப்புப் பதிவேடுகளை உறுதிப்படுத்துமாறு எச்சரிக்கப்படுகிறது

February 29 வரை, கனடா முழுவதும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஒன்பது பேர் உறுதி செய்யப்பட்டனர்.

Related posts

Toronto பெரும்பாகத்தில் வீடு விற்பனையில் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

இத்தாலி பயணமாகும் கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan

கடத்தப்பட்ட Ontario பெண் குறித்த தகவல் வழங்குபவர்களுக்கு $100,000 வெகுமதி

Lankathas Pathmanathan

Leave a Comment