February 23, 2025
தேசியம்
செய்திகள்

கனடிய மத்திய வங்கி வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை?

கனடிய மத்திய வங்கி இந்த வாரம் வட்டி விகிதங்களில் மாற்றங்கள் எதையும் மேற்கொள்ளாது என எதிர்பார்க்கப்படுகிறது.

கனடிய மத்திய வங்கியின் வட்டி விகித அறிவிப்பு இந்த வாரம் வெளியாக உள்ளது.

ஆனாலும் மத்திய வங்கி இந்த வாரம் அதன் வட்டி விகித அறிவிப்பில் மாற்றங்களை மேற்கொள்ளாது என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்  மத்திய வங்கி அதன் முக்கிய வட்டி விகிதத்தை புதன்கிழமை (06) ஐந்து சதவீதத்தில் தொடர்ந்து வைத்திருக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

பலவீனமான பொருளாதார நிலைமைகள் வரவிருக்கும் மாதங்களில் வட்டி விகிதக் குறைப்புக்கு களம் அமைக்கிறது என பொருளாதார வல்லுநர்கள் எதிர்வு கூறுகின்றனர்.

பொருளாதார வல்லுநர்கள் June மாதத்தில் வட்டி விகித குறைப்பை எதிர்பார்க்கின்றனர்.

Related posts

Quebecகில் தேடப்படும் குற்றவாளி கைது

Lankathas Pathmanathan

Moderna தடுப்பூசி விநியோகங்களில் மேலும் தாமதம்

Lankathas Pathmanathan

முக்கிய வட்டி விகிதம் மேலும் அரை சதவீதம் உயரக்கூடும்

Lankathas Pathmanathan

Leave a Comment