தேசியம்
செய்திகள்

முன்னாள் பிரதமருக்கு அரசு முறை இறுதிச் சடங்கு

முன்னாள் பிரதமர் Brian Mulroneyயின் இறுதிச் சடங்கு இந்த மாத இறுதியில் நடைபெறும்.

84 வயதில் காலமான முன்னாள் பிரதமரின் இறுதி சடங்கு அரசு முறையில் நடைபெற உள்ளது.

Brian Mulroneyக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கனடியர்கள் தங்கள் இரங்கல் தெரிவிக்க இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்

Florida மருத்துவமனையில் Brian Mulroney  வியாழக்கிழமை (29) மரணமடைந்தார்

கனடிய நாடாளுமன்ற அமைதி கோபுரத்தில் –  Peace Tower – அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் கனடிய தேசிய கொடி அரை கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை (01) காலை நாடாளுமன்றத்தில் கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்வுகளை இடைநிறுத்த ஒப்புக் கொண்டனர்.

March மாதம் 18 ஆம் திகதி வரை Brian Mulroneyக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்  நாடாளுமன்ற அமர்வுகளை இடைநிறுத்த அவர்கள் இணங்கினர்.

Progressive Conservative கட்சியின் தலைவராக Brian Mulroney, 1984 முதல் 1993 வரை ஒன்பது வருடங்கள் கனடிய பிரதமராக பதவி வகித்தார்.

Related posts

TTC தலைமை நிர்வாக அதிகாரி பதவி விலகல்

Lankathas Pathmanathan

February மாதம் வீடு விற்பனையில் அதிகரிப்பு

Lankathas Pathmanathan

குழந்தைகளுக்கான COVID தடுப்பூசி October மாதம் ஆரம்பமாகும்: சுகாதார அமைச்சர் 

Gaya Raja

Leave a Comment