கனடாவிற்கு பயணம் மேற்கொள்ளும் Mexico நாட்டவர்களுக்கு visa தேவைகள் மீண்டும் நடைமுறைக்கு வருகிறது.
கனடிய மத்திய அரசின் இந்த புதிய விதிகள் வியாழக்கிழமை (29) இரவு 11.30 மணி முதல் அமுலுக்கு வருகின்றது.
நிராகரிக்கப்படும் அகதிக் கோரிக்கைகளுக்கு மத்தியில் இந்த நடைமுறை அமுலுக்கு வருகிறது.
இதற்கான கோரிக்கையை Conservative கட்சி கடந்த மாதம் விடுத்திருந்தது.
Mexicoவில் இருந்து கனடாவில் புகலிட கோரிக்கை விடுபவர்களின் எண்ணிக்கை அண்மைய காலத்தில் அதிகரித்துள்ளன.
ஆனாலும் அகதி கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படும் Mexico விண்ணப்பதாரர்களின் விகிதம் ஏனைய நாடுகளை விட மிகவும் குறைவாக உள்ளது.
2016 இல் Mexico நாட்டவர்களுக்கு visa தேவையை நீக்குவதாக கனடிய அரசாங்கம் அறிவித்திருந்தது.
இது Mexicoவைச் சேர்ந்தவர்கள் கனடாவில் புகலிடம் கோருவதை எளிதாக்கியது.