தட்டம்மை – measles – நோயால் பாதிக்கப்பட்ட மற்றும் ஒருவர் Ontario மாகாணத்தில் அடையாளம் காணப்பட்டார்.
Brantford-Brant நகரைச் சேர்ந்த ஒரு குழந்தைக்கு ஐரோப்பாவிற்கு பயணம் செய்த பின்னர் தட்டம்மை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த குழந்தை 10 வயதுக்கு உட்பட்டது என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த குழந்தை தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
இதன் மூலம் தட்டம்மை நோயினால் பாதிக்கப்பட்ட ஐந்து பேர் இதுவரை கனடாவில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தட்டம்மை நோயின் பரவல் குறித்த எச்சரிக்கை Ontario மாகாண தலைமை சுகாதார அதிகாரியால் ஏற்கனவே வெளியிடப்பட்டது.
2023 இல் கனடாவில் 12 தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.