தேசியம்
செய்திகள்

கனடா தலைமையிலான NATO பணிக்கு $273 மில்லியன் நிதி

கனடா தலைமையிலான NATO பணிக்கு 273 மில்லியன் டொலர் நிதி உதவி கிடைக்கிறது.

Latviaவில் உள்ள NATOவின் கனடா தலைமையிலான குழுவிற்கு புதிய இராணுவ உபகரணங்களை பெறுவதற்கு மத்திய அரசாங்கம் 273 மில்லியன் டொலர்களை செலவு செய்கிறது.

பாதுகாப்பு அமைச்சர் Bill Blair இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

Brussels நகரில் நடைபெறும் NATO  பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டபோது இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

2012ஆம் ஆண்டுக்குப் பின்னர் கனடிய ஆயுதப் படைகள் வான் பாதுகாப்பு திறனை பெறுவது இதுவே முதல் முறை எனவும் அமைச்சர் Bill Blair கூறினார்.

அவசர அடிப்படையில் இந்த உபகரணங்கள் கொள்வனவு செய்யப்படுவதாகவும் , இந்த ஆண்டின் இறுதியில் அவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts

சுதந்திர தொடரணியினரை சந்திக்க திட்டமிட்டுள்ள Conservative தலைவர்

Lankathas Pathmanathan

நான்காவது நாளாகவும் Ontarioவில் 200க்கும் அதிகமான தொற்றுக்கள்!

Gaya Raja

Ontario அமைச்சரவையில் இருந்து விலகும் Parm Gill

Lankathas Pathmanathan

Leave a Comment