Rwanda அரசாங்கத்திற்கு உதவிய குற்றச்சாட்டு உள்ளடக்கிய விசாரணையில் RCMP அதிகாரி ஒருவர் கைதாகியுள்ளார்.
Alberta RCMP அதிகாரி Rwanda அரசாங்கத்திற்கு காவத்துறை தகவல்களை கசிய விட்டதாக குற்றம் சாட்டப்பட்டார்
இவ்வாறு கைதாகி, குற்றம் சாட்டப்பட்டவர் Alberta முன்னணி RCMP அதிகாரி என தெரியவருகிறது.
வெளிநாட்டு அரசாங்கத்திற்கு உதவிய குற்றச்சாட்டு உள்ளடக்கிய தேசிய பாதுகாப்பு விசாரணையில் இந்த குற்றச்சாட்டு பதிவானது.
கைதாகி, குற்றம் சாட்டப்பட்டவர் 36 வயதான Const. Eli Ndatuje என கூறப்படுகிறது.
இவர் கடந்த சனிக்கிழமை (10) RCMP காவல்துறை ஒருங்கிணைந்த தேசிய பாதுகாப்பு அமுலாக்க குழுவால் கைது செய்யப்பட்டார்.
தகவல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நம்பிக்கை மீறல் உட்பட மூன்று குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொள்கிறார்
Eli Ndatuje பல நிபந்தனைகளின் கீழ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தனது கடவுச்சீட்டை ஒப்படைக்க வேண்டும், Alberta மாகாணத்தை விட்டு வெளியேற கூடாது, தனது கைரேகையை பதிவு செய்ய வேண்டும் உட்பட நிபந்தனைகளை Eli Ndatujeஎதிர்கொள்கின்றார்.
சந்தேக நபர் எதிர்வரும் 11ஆம் திகதி Calgary மாகாண நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த குற்றவியல் விசாரணை தொடர்வதாக RCMP தெரிவித்துள்ளது.
இவருக்கு எதிரான குற்றச் சாட்டுக்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை