இனப்படுகொலை குற்றச்சாட்டில் ஸ்ரீலங்காவை சர்வதேச நீதிமன்றம் கொண்டு செல்ல Conservative கட்சித் தலைவர் உறுதியளித்துள்ளார்.
ஸ்ரீலங்காவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உள்ளதாக Conservative கட்சியின் தலைவர் Pierre Poilievre தெரிவித்துள்ளார்
சர்வதேச குற்றவியல் நீதிமன்றங்களில் குற்றம் சாட்டப்பட்ட போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தொடர வழக்கறிஞர்களை நியமிக்கவும் அவர் உறுதியளித்துள்ளார்.
தனது திட்டத்தில் “இனப்படுகொலையின் பங்கிற்காக ராஜபக்ச ஆட்சியின் குற்றவாளிகளை குறிவைக்கும் Magnitsky தடைகள்” அடங்கும் எனவும் Pierre Poilievre குறிப்பிட்டார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court – ICC), சர்வதேச நீதிமன்றம் (International Court of Justice – ICJ) ஆகியவற்றில் ராஜபக்ச ஆட்சியாளர்கள் மீது வழக்குத் தொடர விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
ராஜபக்ச ஆட்சியில் நிகழ்ந்த முறைகேடுகளுக்கு பொறுப்பேற்கவும், தமிழர்களுக்கு எதிராக நிகழ்ந்தது இனப்படுகொலை என்பதை உலக அரங்கில் அங்கீகரிக்கவும் ஐ.நா உட்பட பிற சர்வதேச அரங்குகளில் பிரேரணைகளை முன்வைப்போம் எனவும் Pierre Poilievre கூறினார்.