December 12, 2024
தேசியம்
செய்திகள்

ஐந்து குடும்ப உறுப்பினர்களின் மரணத்தில் முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டுகள் பதிவு!

Manitobaவில் ஐந்து குடும்ப உறுப்பினர்களின் மரணத்தில் முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

29 வயதான Manitoba நபர் மீது முதல் நிலை கொலைக்கு ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

அவர் தனது மூன்று குழந்தைகள் உட்பட குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரைக் கொன்றதாக கூறப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை (11) காலை 7.30 மணியளவில் இந்த சம்பவம் குறித்த விசாரணை ஆரம்பித்ததாக RCMP தெரிவித்தது.

Carman, Manitobaவில் நெடுஞ்சாலை 3 இல் வாகன விபத்து குறித்த விசாரணைக்கு அதிகாரிகள் அனுப்பப்பட்டனர்.

அங்கு ஒருவரை மோதிய வாகனம் சம்பவ இடத்தில் தரித்து நிற்காமல் சென்றது.

சம்பவ இடத்தில் பள்ளத்தில் ஒரு பெண்ணின் சடலத்தை காவல்துறையினர் மீட்டனர்.

அவர் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபருடன் வாழ்ந்து வந்த 30 வயதுடைய பெண் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

தொடர்ந்து, Cartier, Manitobaவில் நெடுஞ்சாலை 248 இல் வாகனம் ஒன்று தீப்பிடித்ததாக RCMPக்கு காலை 10 மணியளவில் அழைப்பு விடுக்கப்பட்டது.

அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றடைய முன்னர், எரிந்து கொண்டிருந்த வாகனத்தில் இருந்து மூன்று இளம் குழந்தைகள் ஒருவரினால் வெளியேற்றப்பட்டனர்

இந்த மூன்று குழந்தைகளும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இறந்த குழந்தைகள் முதலில் சடலமாக மீட்கப்பட்ட பெண், கைதான சந்தேக நபர்களின் மூன்று குழந்தைகளான – ஆறு வயது பெண் குழந்தை, நான்கு வயது மகன்,  இரண்டரை மாத பெண் குழந்தை – என அடையாளம் காணப்பட்டனர்

வாகனம் தீப்பிடித்த இடத்தில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

அதிகாரிகள் தொடர்ந்த விசாரணையை அடுத்து Carman, Manitobaவில் ஒரு இல்லத்தில் இருந்து மற்றொரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது.

அவர் இவர்களின் 17 வயது மருமகள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த மூன்று சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என காவல்துறையினர் கூறினர்.

இதில் கைதானவர் 29 வயதான Ryan Manoakeesick என RCMP தெரிவிக்கின்றது.

இவர் மீது ஐந்து முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள RCMP தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

இவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

கனேடிய எல்லையில் PCR சோதனை தேவை -தலைமை பொது சுகாதார அதிகாரி

Gaya Raja

Manitobaவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐந்து நாள் விடுமுறை திட்டம்

Gaya Raja

Conservative கட்சி உறுப்பினர்களின் தெரிவு Poilievre – கனடியர்களின் தெரிவு Charest!

Lankathas Pathmanathan

Leave a Comment