தேசியம்
செய்திகள்

முன்னாள் உலக Junior hockey வீரர்கள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு தாமதம் குறித்து காவல்துறை மன்னிப்பு

முன்னாள் உலக hockey junior வீரர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளின் தாமதம் குறித்து காவல்துறை மன்னிப்பு கோரியுள்ளது.

இந்த பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளில் பாதிக்கப்பட்டதாக கூறப்படுபவர்களிடம்   London காவல்துறை மன்னிப்பு திங்கட்கிழமை (05) கோரியுள்ளது.

2018 ஆம் ஆண்டு நிகழ்ந்ததாக கூறப்படும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானவர், அவரது குடும்பத்தினரிடம் London காவல்துறைத் தலைவர் Thai Truong மன்னிப்பு கோரியுள்ளார்

London காவல்துறையினர் ஆரம்பத்தில் இந்த குற்றச்சாட்டுகளை பதிவு செய்யவில்லை.

குற்றம் சாட்டுவதற்கு போதுமான காரணங்கள் இல்லை என்ற காரணத்தால் இந்த தீர்மானத்தை London காவல்துறை எடுத்திருந்தது.

அதன் பின்னர் சேகரிக்கப்பட்ட புதிய ஆதாரங்கள், தகவல்கள் ஐந்து முன்னாள் உலக hockey junior வீரர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்தன என காவல்துறைத் தலைவர் தெரிவித்தார்.

2018 கனடிய இளையோர் hockey அணியின் 5 உறுப்பினர்கள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர்.

New Jersey Devils’ hockey அணியின் Michael McLeod, New Jersey Devils’ hockey அணியின் Cal Foote, Philadelphia Flyers’ hockey அணியின் Carter Hart, Calgary Flames’ hockey அணியின் Dillon Dube, முன்னாள் Ottawa Senators hockey அணியின் Alex Formenton ஆகியோர் இந்த குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர் என கூறப்படுகிறது.

Related posts

கனடிய மத்திய வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்துகிறது

Lankathas Pathmanathan

Ontario மாகாணத்தில் முடிவுக்கு வரும் கல்வி ஊழியர்களின் வேலை நிறுத்தம்

Lankathas Pathmanathan

இலங்கை குடும்பத்தை படுகொலை செய்த சந்தேக நபர் நீதிமன்றில்

Lankathas Pathmanathan

Leave a Comment