தேசியம்
செய்திகள்

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முன்னாள் உலக Junior hockey வீரர்கள்

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் 2018 கனடிய இளையோர் hockey அணியின் ஐந்து உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

2018 கனடிய இளையோர் hockey அணியின் 5 உறுப்பினர்கள் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர் என தெரியவருகிறது.

New Jersey Devils’ hockey அணியின் Michael McLeod, New Jersey Devils’ hockey அணியின் Cal Foote, Philadelphia Flyers’ hockey அணியின் Carter Hart, Calgary Flames’ hockey அணியின் Dillon Dube, முன்னாள் Ottawa Senators hockey அணியின் Alex Formenton ஆகியோர் இந்த குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றனர் என கூறப்படுகிறது.

இவர்களில் Alex Formenton கடந்த ஞாயிற்றுக்கிழமை காவல்துறையில் சரணடைந்துள்ளார்.

ஏனையவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னதாக காவல்துறையில் சரணடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனாலும் இந்த குற்றச்சாட்டுகளை காவல்துறையினர் உறுதிப்படுத்தவில்லை.

நிலுவையில் உள்ள இந்த குற்றச்சாட்டுகள் June 2018இல் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையது என தெரியவருகிறது.

இந்த குற்றச்சாட்டுகள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

Bay of Quinte மாகாண இடைத் தேர்தல் இந்த வாரம்

Lankathas Pathmanathan

எல்லைக் கட்டுப்பாடுகள் குறித்த புதிய விபரங்கள் விரைவில் வெளியாகும்: அமைச்சர் LeBlanc

Gaya Raja

NATO தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு

Lankathas Pathmanathan

Leave a Comment