December 12, 2024
தேசியம்
செய்திகள்

அரசு முறை இறுதிச் சடங்கில் NDP முன்னாள் தலைவர் நினைவு கூறப்பட்டார்

Ottawaவில் நடைபெற்ற அரசு முறை இறுதிச் சடங்கில் புதிய ஜனநாயக கட்சியின் முன்னாள் தலைவர் Ed Broadbent நினைவு கூறப்பட்டார்.

Carleton Dominion-Chalmers Centre தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை (28) மாலை அவரது இறுதிச் சடங்கு நடைபெற்றது.

இந்த தொகுதியை Ed Broadbent 2004 முதல் 2006 வரை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

அரசு முறை இறுதிச் சடங்கில் NDP தலைவர் Jagmeet Singh, Manitoba மாகாண NDP முதல்வர்  Wab Kinew உள்ளிட்ட பலரது உரைகள் இடம்பெற்றன.

Ed Broadbent தனது 87 வயதில் January 11ஆம் திகதி காலமானார்.

Ed Broadbent முதன்முதலில் 1968 இல் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் 21 ஆண்டுகள் புதிய ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.

முதலில் Oshawa-Whitby தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய அவர், பின்னர் Ottawa மத்திய தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றினார்.

1975 முதல் 1989 வரை புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவராக அவர் 14 ஆண்டுகள் பதவி வகித்தார்.

Liberal, Conservative என நான்கு பிரதமர்கள் நாட்டை வழிநடத்திய காலகட்டம் அதுவாகும்.

Ed Broadbent 1936ஆம் ஆண்டு Oshawaவில் பிறந்தவர்.

Related posts

கனடாவில் 203,000க்கும் அதிகமான COVID தொற்றுக்கள்

Lankathas Pathmanathan

March இறுதிக்குள் முகமூடி கட்டுப்பாடுகளை நீக்கும் நிலையில் Ontario உள்ளது

Lankathas Pathmanathan

தொடரும் ;கனடா தினத்தை இரத்து செய்வதற்கான அழைப்புகள்!

Gaya Raja

Leave a Comment