தேசியம்
செய்திகள்

Montreal நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகல்!

Montreal நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து முன்னாள்  நீதியமைச்சர் David Lametti விலகினார்.

தனது பதவி விலகல் இம்மாத இறுதியில் அமலுக்கு வரும் என LaSalle-Emard-Verdun தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் நாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் ஆரம்பமாகும் நிலையில் Liberal நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் பின்னர் David Lametti தனது பதவி விலகல் அறிவித்தலை வெளியிட்டார்.

அவர் முதலில் Liberal கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக 2015 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2019ஆம் ஆண்டு அவரை Justin Trudeau மத்திய  நீதியமைச்சராக நியமித்தார்.

கடந்த July மாதம் அறிவிக்கப்பட்ட அமைச்சரவை மாற்றத்தில் David Lametti  அமைச்சு பதவியில் இருந்து விலக்கப்பட்டார்.

Related posts

Conservative கட்சியின் தலைமைப் போட்டியில் மேலும் பல புதிய வேட்பாளர்கள்

Durham காவல்துறை அதிகாரிகள் இருவர் காயம்

Lankathas Pathmanathan

கடந்த ஆண்டின் இறுதியில் அதிக அளவில் நிதியை திரட்டிய Conservative

Lankathas Pathmanathan

Leave a Comment