Markham நகரில் வாகனம் மோதியதில் தமிழ் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்தார்
27 வயதான ஆண் படுகாயமடைந்த நிலையில் உயிர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 12ஆம் திகதி Donald Cousens Parkway & Copper Creek Drive சந்திப்புகளும் அருகாமையில் மாலை 6 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.
தனது Hyundai Genesis வாகனத்தில் இருந்து எழுந்த சத்தம் குறித்து சரிபார்ப்பதற்காக வாகன சாரதி வீதியோரமாக வாகனத்தை நிறுத்தியுள்ளார்.
வாகனத்தில் இருந்து இறங்கிய அவரை அந்த வழியாக சென்ற Honda Civic வாகனம் மோதியது.
இதில் 27 வயதான ஆண் கணிசமான தூரம் தூக்கி எறியப்பட்டார்.
அதே வாகனத்தில் பயணித்த ஒருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
Honda Civic வாகனத்தின் ஓட்டுநர் சிறிய காயத்துக்கு உள்ளானார்.
இதுவரை இந்த சம்பவம் குறித்து எவர் மீது குற்றச்சாட்டுக்கள் எதுவும் பதிவாகவில்லை.