தேசியம்
செய்திகள்

Strep A நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

கனடாவில் strep A நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

உயிருக்கு ஆபத்தான strep A நோய்த்தொற்றுகளின் அதிக எண்ணிக்கையை கனடாவின் பொது சுகாதார நிறுவனம் பதிவு செய்துள்ளது.

குறிப்பாக 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் இந்த நோய் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

இந்த நோய்த் தொற்றால் Ontario மாகாணத்தில் குறைந்தது ஆறு குழந்தைகள் இறந்துள்ளனர்.

கடந்த 9 ஆம் திகதி வரை,  4,600 group A streptococcus மாதிரிகளை கனடாவின் பொது சுகாதார நிறுவனம் பெற்றுள்ளது.

இது கனடாவில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக அதிகமான வருடாந்த எண்ணிக்கையாகும்.

2019இல் பதிவான உச்ச நிலையான 3,236 வழக்குகளை விட இது 40 சதவீதத்திற்கும் அதிகமான அதிகரிப்பாகும்.

Related posts

முதற்குடிகள் குழந்தைகளுடன் 20 பில்லியன் டொலர் குழந்தைகள் நல தீர்வு

Lankathas Pathmanathan

G7 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் கனடிய பிரதமர்!

Gaya Raja

14 வயது சிறுமி கடத்தப்பட்டதில் மூவர் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment