February 22, 2025
தேசியம்
செய்திகள்

கனடிய தமிழர் தேசிய அவைக்கு எதிராக கனடியத் தமிழர் பேரவை அவதூறு வழக்கு

கனடிய தமிழர் தேசிய அவை  (NCCT),  NCCT ஊடகப் பேச்சாளர் தேவா சபாபதி ஆகியோருக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடர கனடியத் தமிழர் பேரவை (CTC) உத்தேசித்துள்ளது.

கனடியத் தமிழர் பேரவை இந்த தகவலை வெளியிட்டது.

இந்த சட்ட நடவடிக்கை NCCT, அதன் ஊடகப் பேச்சாளரினால் பரப்பப்பட்ட தவறான, ஆதாரமற்ற அறிக்கைகளின் அடிப்படையில் தொடரப்படவுள்ளதாக CTC கூறுகிறது.

இவ்வாறு பிழையான ஆதாரமற்ற தகவல்களை கனடியத் தமிழர் பேரவையின் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும் வகையில் NCCT வேண்டுமென்றே பரப்புவதாக நம்புவதாக CTC கூறுகிறது.

இது தொடர்பாக CTC இன் வழக்கறிஞரால் விளக்கம் கோரி  அனுப்பப்பட்ட கடிதத்திற்கு NCCT பதிலளிக்கவில்லை என கனடியத் தமிழர் பேரவை தெரிவிக்கிறது.

Related posts

West Bank பகுதியில் இருந்து வெளியேறிய கனேடியர்களின் முதல் குழு ஜோர்டான் சென்றடைந்தது

Lankathas Pathmanathan

ஐரோப்பிய பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பிரதமர் ரஷ்யர்கள் மீது மேலும் பொருளாதாரத் தடைகளை அறிவித்தார்

Lankathas Pathmanathan

அனைத்துலக தமிழர் பேரவை அறிமுகம்

Lankathas Pathmanathan

Leave a Comment