கனடாவின் பணவீக்க விகிதம் December மாதம் 3.4 சதவீதம் உயர்ந்துள்ளது.
கனடாவின் வருடாந்த பணவீக்க விகிதம் December மாதம் 3.4 சதவீதமாக உயர்ந்துள்ளதாக கனடிய புள்ளி விபரத் திணைக்களம் செவ்வாய்க்கிழமை (16) தெரிவித்தது
இது பொருளாதார வல்லுனர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒரு உயர்வாகும்
November மாதத்துடன் ஒப்பிடுகையில் December மாதத்தில் எரிவாயுவின் விலையில் சரிவு ஏற்பட்டதால் இந்த உயர்வை பொருளாதார வல்லுநர்கள் பரவலாக எதிர்பார்த்தனர்.
பணவீக்க விகிதம் November மாதம் 3.1 சதவீதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மளிகைப் பொருட்களின் விலை ஒரு வருடத்திற்கு முன்னர் இருந்ததை விட 4.7 சதவீதம் உயர்ந்துள்ளது.
இது November மாதத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு வேகத்தைப் பொருந்துகிறது.