தேசியம்
செய்திகள்

இஸ்லாமிய புரட்சிகர காவல் படையை கனடா பயங்கரவாத அமைப்பாக தடை செய்யலாம்: பிரதமர்

இஸ்லாமிய புரட்சிகர காவல் படையை (Islamic Revolutionary Guard Corps – IRGC) கனடா பயங்கரவாத அமைப்பாக தடை செய்யலாம் என பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

உக்ரைன் சர்வதேச விமானம் (Ukraine International Airlines Flight 752) சுட்டு வீழ்த்தப்பட்டதில் பலியானவர்களின் நினைவிடத்தில் பிரதமரின் இந்த கருத்து தெரிவிக்கப்பட்டது.

இந்த விமானம் 2020ஆம் ஆண்டு January மாதம் 8ஆம் திகதி இஸ்லாமிய புரட்சிகர காவல் படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

“பொறுப்புடன்” செயல்பட்டால் இந்த தடை சாத்தியமாகும் என Justin Trudeau திங்கட்கிழமை கூறினார்.

“இஸ்லாமிய புரட்சிகர காவல் படையை பயங்கரவாத அமைப்பாக பொறுப்புடன் பட்டியல் இடுவதற்கான வழிகளைத் தேடுவது உட்பட, நாங்கள் எங்கள் பணியை தொடருவோம்” என பிரதமர் அறிவித்தார்.

இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் கொல்லப்பட்ட 176 பேரில் 55 பேர் கனடிய குடிமக்கள், 30 பேர் நிரந்தர குடியிருப்பாளர்கள்.

இஸ்லாமிய புரட்சிகர காவல் படையை பயங்கரவாத அமைப்பாக தடை செய்யும் தாமதத்தை அரசாங்கம் நிறுத்த வேண்டும் என Conservative தலைவர் Pierre Poilievre ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்

பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை கண்டிப்பதில் கனடா ஒரு தலைமை பதவியை வகிக்க வேண்டும் எனவும் அவர் கோரினார்.

Related posts

Londonனில் வெறுப்புணர்வை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சர்வமத நடை பவனி

Gaya Raja

COVID-19 பரவலின் எதிரொலியாக கனடாவின் முக்கிய செய்திகளை தொகுத்து தருகின்றோம்.

thesiyam

சீன தூதரை கனடாவில் இருந்து வெளியேற்றுவது குறித்து முடிவு செய்யப்படவில்லை: Justin Trudeau

Leave a Comment