கனடாவின் சில பகுதிகளில் இந்த வார விடுமுறையில் 35 cm வரை பனிப்புயல் எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் வேறு சில பகுதிகளில் 40 முதல் 50 milli metres மழைப் பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் கனடா நாடளாவிய ரீதியில் பனிப் புயல், மழைப் பொழிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது
அடுத்த சில நாட்களில், தெற்கு Ontario, Quebec, Atlantic மாகாணங்களில் குளிர்கால புயல் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாகாணங்களின் சில பகுதிகளில் 30 cm வரை பனிப்புயல் எதிர்பார்க்கப்படுகிறது.
Newfoundland மாகாணத்தில் வெள்ளிக்கிழமை (05) 35 cm வரை பனிப்புயல் எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் பாடசாலைகள் சில வெள்ளியன்று மூடப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை (07) தெற்கு Nova Scotia, New Brunswick, PEI இன் சில பகுதிகளில் பனிப்புயல் எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுச்சூழல் கனடா தெற்கு Nova Scotiaவிற்கு சிறப்பு வானிலை அறிக்கையை வெளியிட்டது.
அங்கு ஞாயிற்றுக்கிழமை 5 முதல் 20 cm வரை பனிப்பொழிவு சாத்தியமாகும் என கூறப்படுகிறது
வெள்ளிக்கிழமை காலை மேற்கு மாகாணங்களுக்கு சுற்றுச்சூழல் கனடா மழைப்பொழிவு எச்சரிக்கையை வெளியிட்டது.
அங்கு 40 முதல் 50 milli metres மழைப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.