தேசியம்
செய்திகள்

சூடான் மக்களுக்கு மனிதாபிமான விசா வழங்க கனடா முடிவு

சூடானில் ஏற்பட்டுள்ள மோதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மனிதாபிமான நடைமுறையை கனடா அறிமுகப்படுத்தவுள்ளது.

சூடானின் தொடர் யுத்தத்தில் இருந்து தப்பிச் செல்பவர்களுக்கு மனிதாபிமான விசா வழங்க கனடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது

கனடாவின் குடிவரவு, அகதிகள், குடியுரிமை அமைச்சர் Marc Miller வியாழக்கிழமை (28) இந்த அறிவித்தலை வெளியிட்டார்.

சூடானில் அதிகரித்து வரும் உள்நாட்டுப் போரில் இருந்து வெளியேறும் மக்களுக்கு உதவும் வகையில் இந்த திட்டம் அமைந்துள்ளது.

சூடானில் தொடரும் மோதல்களால் கனடா ஆழ்ந்த கவலையில் உள்ளதாக அமைச்சர் கூறினார்.

அங்கு அமைதியை ஏற்படுத்தவும், தொடரும் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க பாடுபடும் சூடான் மக்களுக்கு ஆதரவு வழங்கவும் கனடா தயாராகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

னேடிய குடிமகன் அல்லது நிரந்தரக் குடியுரிமை பெற்ற கனடியரின் குழந்தை, பேரக்குழந்தை, பெற்றோர், தாத்தா, பாட்டி அல்லது உடன்பிறந்தவர்களுக்கு இந்தத் திட்டம் பொருந்தும்.

Related posts

உக்ரைனுக்கான ஆதரவை மீண்டும் வலியுறுத்தும் கனடா

Lankathas Pathmanathan

காணாமல் போன தமிழரை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரம்!

Lankathas Pathmanathan

மூன்று புதிய Senatorகள் பிரதமரினால் நியமனம்!

Gaya Raja

Leave a Comment