December 12, 2024
தேசியம்
செய்திகள்

P.E.I. இளைஞர் காணாமல் போன சம்பவம் தொடர்பாக இருவர் கைது

Prince Edward Island இளைஞர் காணாமல் போன சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

17 வயது இளைஞன் காணாமல் போன சம்பவம் தொடர்பாக இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக Prince Edward Island RCMP தெரிவித்துள்ளது.

காணாமல் போன இளைஞர் 17 வயதான Tyson Blair MacDonald என அடையாளம் காணப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் செவ்வாய்க்கிழமை (19) மாலை கைது செய்யப்பட்டதாக RCMP தெரிவித்தது.

செவ்வாய் அதிகாலையில், மனித எச்சங்களை அதிகாரிகள் கண்டுபிடித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

கண்டுபிடித்த எச்சங்களை அடையாளம் காண மாகாண மரண விசாரணை அதிகாரி காவல்துறையினருடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

Related posts

கனடிய கொடியை Olympics ஆரம்ப நிகழ்வில் ஏந்திச் செல்பவர்கள் தெரிவு!

Gaya Raja

தமிழ் பெண்ணின் மரணம் சந்தேகத்திற்குரியதல்ல! 

Lankathas Pathmanathan

Ontarioவில் COVID ஆதிக்கம் காரணமாக Omicronஇன் புதிய துணை மாறுபாடு எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Comment