தேசியம்
செய்திகள்

Quebec தொழிலதிபரின் மரணம் குறித்த குற்றச்சாட்டில் நான்கு பேர் கைது

Dominicaவில் நிகழ்ந்த Quebec தொழிலதிபரின் கொடூரமான மரணம் குறித்த குற்றச்சாட்டில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

Quebec தொழிலதிபர் Daniel Langlois, அவரது துணை Dominique Marchand ஆகியோர் Caribbean நாடான Dominicaவில் வெள்ளிக்கிழமை (01) சடலமாக மீட்கப்பட்டனர்.

Daniel Langlois அறக்கட்டளை இந்த இரண்டு இறப்புகளையும் உறுதிப்படுத்தியது

இந்த சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் கைதான நான்கு சந்தேக நபர்கள் காவல்துறையினர் காவலில் உள்ளனர்.

இந்த கைதுகளை Dominic நீதி, குடிவரவு, தேசிய பாதுகாப்பு அமைச்சர் Rayburn Blackmoore உறுதிப்படுத்தினார்.

கைதானவர்களில் மூன்று வெளிநாட்டவர்களும் அடங்குவதாக அவர் கூறினார்

Related posts

கறுப்பு ஜூலையின் 40 ஆம் ஆண்டை நினைவு கூறும் பிரதமர்

Lankathas Pathmanathan

Pride நிகழ்வுகளின் பாதுகாப்பிற்கு $1.5 மில்லியன் நிதி உதவி

Lankathas Pathmanathan

காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த உலங்குவானூர்தி விபத்து – விமானி மரணம்!

Lankathas Pathmanathan

Leave a Comment