December 12, 2024
தேசியம்
செய்திகள்

Kitchener Centre மாகாண சபை இடைத் தேர்தலில் பசுமை கட்சி வெற்றி

Kitchener Centre இடைத் தேர்தலில் Ontario மாகாண பசுமை கட்சியின் வேட்பாளர் Aislinn Clancy வெற்றி பெற்றார்.

அடுத்த மாகாண சபை உறுப்பினராக தெரிவாகும் இந்த தேர்தலில் 18 பேர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் Laura Mae Lindo கடந்த July மாதம் பதவியில் இருந்து விலகியதை அடுத்து இந்த இடைத் தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த தேர்தலில் NDP வேட்பாளர் Debbie Chapman இரண்டாவது இடத்தை பெற்றார்.

Progressive Conservative வேட்பாளர் Rob Elliott மூன்றாவது இடத்தையும், Liberal வேட்பாளர் Kelly Steiss நான்காவது இடத்தையும் பெற்றனர்.

இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற்ற Aislinn Clancy, Kitchener நகரசபை உறுப்பினராவார்.

இந்த வெற்றியின் மூலம் Ontarioவின் பசுமைக் கட்சி மாகாண சபையில் இரண்டு மாகாண சபை உறுப்பினர்களை பெறுகிறது.

Ontario மாகாண சபையில் பசுமைக் கட்சியின் தலைவர் Mike Schreiner ஏற்கனவே பதவி வகிக்கின்றார்.

Kitchener Centre தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக Mike Morrice உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இரண்டாம் காலாண்டில் பொருளாதாரம் 3.3 சதவீதம் வளர்ச்சி

Lankathas Pathmanathan

Ontario மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படும் இராணுவத்தினர்!

Gaya Raja

December மாதம் பதிவான வர்த்தகப் பற்றாக்குறை

Lankathas Pathmanathan

Leave a Comment