February 21, 2025
தேசியம்
செய்திகள்

கனடியர்களின் ஆயுட்காலம் மீண்டும் குறைந்தது

கனடியர்களின் ஆயுட்காலம் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக குறைந்துள்ளது.

கனடிய புள்ளி விபரத் திணைக்களம் திங்கட்கிழமை (27) இந்த தகவலை வெளியிட்டது.

2022 இல் சராசரி கனேடியரின் ஆயுட்காலம் 81.3 ஆண்டுகளாகக் குறைந்துள்ளது.

2019 இல் சராசரி கனேடியரின் ஆயுட்காலம் 82.3 ஆண்டுகளாக பதிவு செய்யப்பட்டது.

COVID தொற்று ஆரம்பித்த காலத்தில் இருந்து வேறு எந்த ஆண்டிலும் இல்லாத அளவுக்கு அதிகமான மக்கள் தொற்றின் காரணமாக 2022இல் இறந்துள்ளனர்

கடந்த ஆண்டு கனடியர்களின் இறப்புக்கு COVID மூன்றாவது முக்கிய காரணியாக மாறியது.

புற்றுநோய், இதய நோய் ஆகியவை இறப்புக்கான முதல் இரண்டு பொதுவான காரணங்களாக பதிவாகியுள்ளது

இவை இரண்டும் 2022 இல் மொத்த இறப்புகளில் 41.8 சதவீதமாகும்

கடந்த ஆண்டு 19,700க்கும் மேற்பட்ட கனடியர்கள் COVID தொற்றின் காரணமாக இறந்துள்ளனர் என புள்ளிவிவரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

Ontario பெரும்பாலான பொது இடங்களில் முகமூடி கட்டுப்பாடுகளை விலத்தியது

Lankathas Pathmanathan

Ontario மாகாண NDPயின் புதிய தலைவர் அறிவிப்பு

Lankathas Pathmanathan

Torontoவில் முதலாவது ஆட்டத்தில் Blue Jays அணி!

Lankathas Pathmanathan

Leave a Comment