தேசியம்
செய்திகள்

Winnipeg நகரில் “தீவிரமான சம்பவமொன்றில்” மூவர் கொலை – இருவர் காயம்!

Winnipeg நகரில் நிகழ்ந்த ‘தீவிரமான சம்பவமொன்றில் பலர் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் மூவர் கொல்லப்பட்டனர், இருவர் காயமடைந்தனர் என Winnipeg காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது

சம்பவ இடத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான ஐந்து பேரை அதிகாரிகள் கண்டுபிடித்தனர் என காவல்துறையினர் கூறினர்.

ஒரு ஆணும் ஒரு பெண்ணும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்

மேலும் மூன்று பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மற்றொரு ஆண் தனது காயங்களால் இறந்தார்.

மீதமுள்ள இருவர் – ஒரு ஆண், பெண் – ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இதில் பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்பட்டு வருவதாகவும், அறிவிப்புகள் நிலுவையில் இருப்பதாகவும் காவல்துறை கூறுகிறது.

Related posts

போரினால் சேதமடைந்த புகையிரத பாதையை சரி செய்யுங்கள்: உக்ரைன் வேண்டுகோள்

Lankathas Pathmanathan

தமிழ் இனப்படுகொலை நினைவு நிகழ்வில் கனடிய வெளிவிவகார அமைச்சர் பங்கேற்பு

Lankathas Pathmanathan

இலைதுளிர் கால பொருளாதார அறிக்கை எதிர்கட்சிகளினால் விமர்சிக்கப்பட்டன

Lankathas Pathmanathan

Leave a Comment