இஸ்ரேலுக்கும் ஹமாசுக்கும் இடையில் உடனடியாக போர் நிறுத்தம் கோரி பிரதமர் Justin Trudeauவை வலியுறுத்தும் மனுவில் 286,000 பேர் கையெழுத்திட்டனர்.
கடந்த வியாழக்கிழமை (23) நிறைவுக்கு வந்த இந்த மனுவுக்கு ஆதரவான கையெழுத்து கோரிக்கையில் 286,719 பேர் கையெழுத்திட்டனர்.
புதிய ஜனநாயக கட்சியின் இந்த ஆதரவு மனுவுக்கு பதிலளிக்க Liberal அரசாங்கத்திற்கு 45 நாட்கள் அவகாசம் உள்ளது.
காசா பகுதி மீதான முற்றுகையை நீக்குமாறு இஸ்ரேலை கேட்டுக் கொள்ளுமாறு இந்த மனு பிரதமரை வலியுறுத்துகிறது.
ஜெனீவா உடன்படிக்கைகள், சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் கீழ் இஸ்ரேல் தனது கடமைகளை நிறைவேற்ற இந்த மனு வலியுறுத்துகிறது.
பிரதமர் Justin Trudeau இதுவரை போர் நிறுத்தத்திற்கு வெளிப்படையாக அழைப்பு விடுக்கவில்லை.
மாறாக காசாவுக்குள் மனிதாபிமான உதவிகளை அனுமதிக்கும் வகையில் யுத்தத்திற்கு தற்காலிக இடை நிறுத்தத்தை கோரியுள்ளார்.