கனேடியர்களுக்கான மின்னணு விசா சேவைகளை இந்தியா மீண்டும் ஆரம்பித்துள்ளது.
இதுகுறித்த உத்தியோகபூர்வ அறிவித்தலை இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் புதன்கிழமை (22) வெளியிட்டார்.
September மாதம் 21ஆம் திகதி முதல் கனேடியர்களுக்கான இந்திய விசா சேவைகள் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்த இந்திய அரசாங்கம் முடிவு செய்தது.
கனடாவின் முக்கிய சீக்கிய தலைவர் Hardeep Singh Nijjar கொல்லப்பட்டதில் இந்தியாவின் பங்கு இருப்பதாக கனடிய பிரதமர் குற்றம் சாட்டிய நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.
இந்த நிலையில் மீண்டும் மின்னணு விசா சேவைகளை ஆரம்பிக்க இந்திய அரசாங்கம் இந்த வாரம் முடிவு செய்துள்ளது