தேசியம்
செய்திகள்

Edmontonனில் துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் குறிவைத்து கொலை

தென்கிழக்கு Edmontonனில் துப்பாக்கிச் சூட்டில் இறந்த சிறுவன் குறிவைத்து கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Edmonton வணிக வளாகத்தில் வியாழக்கிழமை (09) நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில்  41 வயது ஆணும் அவரது 11 வயது மகனும் கொல்லப்பட்டனர்.

பலியானவர்கள் 41 வயதான Harp Uppal, அவரது 11 வயது மகன்  என காவல்துறையினர் வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தினர்.

பலியான சிறுவன் Gavin என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அவரது தந்தையின் குற்றவியல் காரணமாக சிறுவன் கொல்லப்பட்டதாக விசாரணையாளர்கள் நம்புகின்றனர்.

Harp Uppal முன்னர், October 8, 2021 நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் குறிவைக்கப்பட்டதாக புலனாய்வாளர்கள் உறுதிப்படுத்தினர்.

2022 ஆம் ஆண்டில், Edmonton காவல்துறையினர் இந்த வழக்கில் Harsh Jindal  என்பவருக்கு எதிராக பல பிடியாணையை பிறப்பித்தது.

ஆனால் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை.

Related posts

Ontario  மாகாண Liberal கட்சியின் தலைவரானார் Bonnie Crombie!

Lankathas Pathmanathan

Playoff தொடரில் இருந்து மீண்டும் வெளியேற்றப்பட்ட Maple Leafs

Lankathas Pathmanathan

Remembrance தினம் – கனடிய தேசிய கொடிகள் மீண்டும் அரைக் கம்பத்தில்: மத்திய அரசாங்கம்

Gaya Raja

Leave a Comment