காசாவை விட்டு வெள்ளிக்கிழமை (10) வெளியேற அனுமதிக்கப்பட்ட 260க்கும் மேற்பட்ட கனேடியர்கள் அங்கிருந்து வெளியேற முடியாத நிலை தோன்றியுள்ளது.
260க்கும் மேற்பட்ட கனேடியர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள், அவர்களின் குடும்பங்கள் காசாவிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டது.
எகிப்துக்குள் நுழையும் Rafah எல்லையில் உள்ள கனடிய அதிகாரிகள் அவர்களை வரவேற்பார்கள் என கூறப்பட்டது.
சுமார் 266 கனேடிய குடிமக்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள் வெள்ளிக்கிழமை காசா பகுதியில் இருந்து வெளியேற அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டது.
ஆனாலும் காசா பகுதியை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட்ட கனேடியர்கள் எவரும் அங்கிருந்து வெளியேறவில்லை என கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது
32 கனடியர்கள் வியாழக்கிழமை (09) காசா பகுதியை விட்டு வெளியேற முடிந்தது.
முன்னதாக 75 கனடியர்கள், நிரந்தர குடியிருப்பாளர்கள், குடும்ப உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை (07) இந்த பயணத்தை மேற்கொண்டனர்.
“பாதுகாப்புச் சூழல்” காரணமாக புதன்கிழமை (08) கனேடியர்கள் எவரும் உத்தியோகபூர்வமாக காசா பகுதியை விட்டு வெளியேறவில்லை.
550 கனடியர்கள் காசா பகுதியை விட்டு வெளியேறும் நம்பிக்கையில் உள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே காசாவில் இருந்து கெய்ரோ ஊடாக வெளியேறிய கனடியர்களின் சிலர் இப்போது கனடாவுக்கு திரும்பியுள்ளனர்.
ஏனையவர்கள் தொடர்ந்தும் கெய்ரோவில் தங்கியுள்ளனர்.