February 23, 2025
தேசியம்
செய்திகள்

கனடியர்கள் தொடர்ந்தும் காசாவை விட்டு வெளியேறுவார்கள்?

கனடியர்கள் மேலும் பலர் விரைவில் காசாவை விட்டு வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

காசாவை விட்டு வெளியேற அனுமதி பெற்றவர்கள் பட்டியலில் கனடியர்களின் பெயர் விபரங்களும் அடங்கியுள்ளன.

காசாவின் எல்லைகளின் பொது ஆணையம் இந்த பட்டியலை வெளியிட்டது.

புதன்கிழமை வெளியான இந்த ஆவணத்தில் 40 பெயர்கள் கனடியர்கள் என்ற தலைப்பின் கீழ் உள்ளன.

இவர்களில் பலர் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் என பட்டியலிடப்பட்டுள்ளது.

கனடாவுடன் தொடர்புடைய 75 பேர் செவ்வாய்க்கிழமை எகிப்துடன் எல்லை வழியாக பாலஸ்தீன பிரதேசத்தை விட்டு வெளியேறியதாக கனேடிய அரசாங்கம் உறுதிப்படுத்தியது.

நாளாந்தம் எத்தனை கனடியர்கள் எகிப்துடன் எல்லை வழியாக பாலஸ்தீன பிரதேசத்தை விட்டு வெளியேறுவார்கள் என்பதை தீர்மானிக்க முடியவில்லை என கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

எல்லை கடக்கும் கனடியர்களை வரவேற்கவும், கெய்ரோவிற்கு அவர்களின் போக்குவரத்தை எளிதாக்கவும்
கனேடிய அதிகாரிகள் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

கனடிய  குடிமக்களில் 400க்கும் அதிகமானோர் வரவிருக்கும் நாட்களில் இந்த எல்லையை கடக்க முடியும் என உறுதியளித்துள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சு திங்கட்கிழமை ஒரு அறிக்கையில் கூறியது.

Related posts

இஸ்ரேல்-காசா போர் குறித்த கருத்துக்கு மன்னிப்பு கோரும் Ontario MPP

Lankathas Pathmanathan

தொடர்ந்தும் ஐந்தாவது வருடமாக பொங்கலுக்காக ஒளியூட்டப்படவுள்ள Toronto அடையாள எழுத்துக்கள்

Lankathas Pathmanathan

வெள்ளிக்கிழமை எரிபொருளின் விலை மூன்று சதம் சரியும்

Lankathas Pathmanathan

Leave a Comment