Calgary நகரம் உட்பட Albertaவின் பெரும்பகுதிக்கு பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளுக்கு 10 முதல் 15 சென்டி மீட்டர் வரை பனிப்பொழிவு சாத்தியமாகும் என சுற்றுச்சூழல் கனடா எச்சரித்துள்ளது.
மத்திய மற்றும் தெற்கு Albertaவின் பல பகுதிகளில் பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது.
மத்தியப் பகுதிகளில் திங்கட்கிழமை இரவும், தெற்குப் பகுதிகளில் செவ்வாய்கிழமையும் பனிப்பொழிவு முடிவுக்கு வரும் என எதிர்வு கூறப்படுகிறது
புயலின் போது பயணிப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.