தேசியம்
செய்திகள்

ஹமாஸ் அமைப்பை கண்டிக்கும் பிரேரணை Ontario மாகாண சபையில் நிறைவேற்றம்

ஹமாஸ் அமைப்பை கண்டிக்கும் பிரேரணை ஒன்று Ontario மாகாணசபையில் நிறைவேற்றப்பட்டது.

வியாழக்கிழமைநடைபெற்ற வாக்களிப்பில் 78-0 என்ற வாக்குஅடிப்படையில் இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

இந்த பிரேரணை இஸ்ரேலின் தற்காப்பு உரிமையை உறுதிப்படுத்துகிறது

NDP இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை

இந்த பிரேரணையில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் ஒரு திருத்தத்தை NDP கோரியது.

அந்த கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில் இந்த வாக்கெடுப்பில் NDP கலந்து கொள்ளவில்லை

Progressive Conservative மாகாண சபை உறுப்பினர் Paul Calandra இந்த பிரேரணையை கடந்த திங்கட்கிழமை (16) முன்வைத்தார்.

இரண்டு தமிழ் மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட அனைத்து Progressive Conservative, Liberal மாகாண சபை உறுப்பினர்களும் இந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுப்பதை தவிர, இஸ்ரேல் மீதான தமது அண்மைய தாக்குதலின் போது, பணயக்கைதிகளாக கைது செய்யபட்ட அனைவரையும் ஹமாஸ்விடுவிக்க வேண்டும் எனவும், கனடா காஸாவிற்கு மனிதாபிமான உதவிகளை அனுப்ப வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

Related posts

Ontarioவில் விரிவாக்கப்படும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் – அவசர கால நிலை நீட்டிக்கப்படுகிறது!

Gaya Raja

British Columbia, Prince Edward தீவில் தொடரும் கட்டுப்பாடுகள்

Lankathas Pathmanathan

முழுமையாக தடுப்பூசி பெற்ற பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை நீக்கும் கனடா

Gaya Raja

Leave a Comment