December 12, 2024
தேசியம்
செய்திகள்

முன்னாள் மனைவியை வெட்டிக் கொன்ற கனடிய தமிழருக்கு ஆயுள் தண்டனை!

முன்னாள் மனைவியை கத்தியால் வெட்டிக் கொன்ற கனடிய தமிழருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

37 வயதான சசிகரன் தனபாலசிங்கம் என்ற தமிழருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை (17) ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

2019ஆம் ஆண்டு September மாதம் 11ஆம் திகதி Scarboroughவில் 27 வயதான தர்ஷிகா ஜெகநாதன் இலக்கு வைக்கப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து அவரது முன்னாள் கணவர் சசிகரன் தனபாலசிங்கம் மீது முதல் நிலை கொலை குற்றச்சாட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அவருக்கு எதிரான குற்ற விசாரணை 2022ஆம் ஆண்டு January மாதம் 10ஆம் திகதி Torontoவில் உள்ள குற்றவியல் உயர் நீதிமன்றில் ஆரம்பமானது.

சசிகரன் தனபாலசிங்கம் முதல்நிலைக் கொலைக் குற்றவாளி என விசாரணைக்கு பின் நீதிபதி கடந்த May மாதம் தீர்ப்பளித்தார்.

இந்த நிலையில் கடந்த செவ்வாயன்று சிறை தண்டனை காலம் குறைக்க பட முடியாத அதிக பட்சத் தண்டனையான 25 வருடச் சிறைத்தண்டனை சசிகரன் தனபாலசிங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

தர்ஷிகா ஜெகநாதன், இலங்கையில் மானிப்பாய், சசிகரன் தனபாலசிங்கம், முல்லைத்தீவு ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள்.

இவர்கள் இருவருக்கும் இடையில் 2015ஆம் ஆண்டு இந்தியாவில் திருமணம் நிகழ்ந்தது.

2017ஆம் ஆண்டு February மாதம் 27ஆம் திகதி தர்ஷிகா ஜெகநாதன் கனடாவை வந்தடைந்தார்.

Related posts

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஒரு வாரத்தில் இரண்டாவது தடவை தோல்வி?

Lankathas Pathmanathan

சீனாவில் அரச எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடுபவர்களுக்கு பிரதமர் Trudeau ஆதரவு

Lankathas Pathmanathan

தடுப்பூசி பெறாத பயணிகள் கனடாவுக்கு வரவேற்கப்பட மாட்டார்கள் : பிரதமர் Trudeau

Gaya Raja

Leave a Comment